இந்தியா மற்றும் சீனாவிற்கு இடையேயான இரட்டை வரிவிதிப்பு தவிர்ப்பு
February 12 , 2018 2480 days 747 0
மத்திய அமைச்சரவை இந்தியா மற்றும் சீனாவிற்கு இடையேயான இரட்டை வரிவிதிப்பு தவிர்ப்பு முறையை (Double Taxation Avoidance Agreement - DTAA) திருத்தும் நெறிமுறையில் கையெழுத்திட்டு ஒப்புதலளிக்க அனுமதி தந்துள்ளது.
இரட்டை வரி விதிப்பு தவிர்ப்பு முறை
வருமானத்தின் மீதான வரிகளோடு தொடர்புடைய முறையில் இரட்டை வரி விதிப்பை தவிர்த்தலையும் நிதி ஏய்ப்பை தடுத்தலையும் நோக்கமாகக் கொண்டது.
சமீபத்திய சர்வதேச தரவுகளின் அடிப்படையில் இரட்டைவரி விதிப்பு தவிர்ப்பு முறையின் மீதான தகவல் பரிமாற்றத்தின் விதிகளை மேம்படுத்திட உதவுகிறது.
இந்தியா பங்கேற்ற அடிப்படை தேய்மான மற்றும் இலாப மாற்றுத் திட்டத்தின் (Base Erosion and Profit Shifting - BEPS) கீழ் குறைந்தபட்ச தரவுகளுக்கான செயல்திட்ட அறிக்கைகள் தொடர்பான ஒப்பந்தத்தை அமல்படுத்திடத் தேவையான மாற்றங்களை உள்சேர்த்திட இந்த நெறிமுறை உதவுகிறது.
2010ம் ஆண்டில் இந்தியா, பன்னாட்டு நிறுவனங்கள் வரிகளை தவிர்த்திடும் பொருட்டு குறைந்த வரிகொண்ட நாடுகளுக்கு இலாபத்தை இடம் மாற்றுவதை தடுக்கும் பொருட்டு செய்ய வேண்டிய நடவடிக்கைகளை அமல்படுத்திட ஒரு சர்வதேச பன்னாட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
இந்த ஒப்பந்தம் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாடு (The Organization for Economic Co-operation and Development - OECD) மற்றும் G20 ஆகிய அமைப்புகளின் அடிப்படை தேய்மானம் மற்றும் இலாப இடமாற்றம் திட்டத்தின் வெளிப்பாடு ஆகும்.