இந்தியா மற்றும் செக் குடியரசுக்கிடையே ஐந்து ஒப்பந்தங்கள்
September 9 , 2018 2270 days 673 0
இந்தியா மற்றும் செக் குடியரசானது பாதுகாப்பு, அறிவியல் மற்றும் தொழிற்துறை ஆராய்ச்சி, லேசர் தொழில்நுட்பம், விவசாயம் மற்றும் விசா விதிமுறை தளர்த்தப்படுதல் ஆகிய ஐந்து ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன.
மேலும் இரு நாடுகளும் இராணுவப் பயன்பாடு அல்லாத அணுக்கரு ஆற்றல் ஒத்துழைப்பை தொடங்குவதற்காக ஒப்புக்கொண்டுள்ளன.
ஐந்து ஒப்பந்தங்கள்
இந்திய அறிவியல்சார் மற்றும் தொழிற்துறை ஆராய்ச்சி மன்றம் மற்றும் செக் அறிவியல் நிறுவனம் ஆகியவற்றிற்கிடையேயான ஒத்துழைப்பு.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் பல துறைகளில் இந்திய-செக் குடியரசின் திட்டங்களுக்கு உதவுதல். இந்தியாவின் சார்பாக அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை செக் குடியரசிற்கு உதவும்.