இந்தியா மற்றும் நேபாளத்திற்கிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்
September 2 , 2018 2277 days 656 0
நேபாளத்தில் நடைபெற்ற 4-வது பீம்ஸ்டெக் உச்சி மாநாட்டின் ஒரு பகுதியில் பீகாரின் ரக்சுல் நகரத்திற்கும் காத்மண்டுவிற்கும் இடையே ஒரு யுக்திசார்ந்த இரயில்வே பாதையை கட்டமைக்க இந்தியாவும் நேபாளமும் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
இந்த இரயில் பாதை இரு நாடுகளுக்குமிடையேயான இணைப்பை அதிகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது இரு நாட்டிற்குமிடையேயான மக்களுக்கு இடைப்பட்ட தொடர்பை அதிகப்படுத்திடவும் பொருளாதார வளர்ச்சி மற்றும் மேம்பாட்டை ஊக்குவிக்கவும் எண்ணுகிறது.
தவிர மேலும் 3 இரயில்பாதைத் திட்டங்கள் பட்டியலில் உள்ளன. அவை புதிய ஜல்பைகுரி-காகர்பிட்டா, நௌகான்வா – பாயிராஹவா மற்றும் நேபாள்கஞ்ச் சாலை- நேபாள்கஞ்ச் ஆகியனவாகும்.