TNPSC Thervupettagam

இந்தியா மற்றும் மலேசியா

April 25 , 2020 1583 days 673 0
  • சமீபத்தில் இந்தியா HCQ (hydroxychloroquine) மருந்து ஏற்றுமதி நாடுகளின் பட்டியலில் மலேசியாவைச் சேர்த்துள்ளது. 
  • பனை எண்ணெயை வாங்கும் உலகின் மிகப்பெரிய நாடாகவும் மலேசியாவிற்கான மிகப்பெரிய சந்தையாகவும் இந்தியா  விளங்குகின்றது.
  • இந்தோனேசியாவிற்குப் பின்பு உலகில் இரண்டாவது மிகப்பெரிய பனை எண்ணெய் உற்பத்தியாளர் நாடு மலேசியா ஆகும். 
  • இந்தியாவானது ஒவ்வொரு ஆண்டும் இந்தோனேசியா மற்றும் மலேசியா ஆகிய நாடுகளிடமிருந்து 9 மில்லியன் டன்கள் பனை எண்ணெயை வாங்குகின்றது.
  • உலகில் பனை எண்ணெய் மற்றும் தாவர எண்ணெயின் மிகப்பெரிய இறக்குமதியாளர் நாடு இந்தியா ஆகும்.
  • நாட்டின் மொத்த தாவர எண்ணெய் இறக்குமதியில் பனை எண்ணெயின் பங்கு 60%ற்கும் மேலாகும்.
  • பின்னணி
  • மார்ச் மாதத்தில், மலேசியாவில் புதிய பிரதமராக முக்யுதின் யாசின் பொறுப்பேற்றார். 
  • முன்னதாக பிப்ரவரி மாதத்தில் மலேசியாவின் பிரதமர் பதவியிலிருந்து மஹதிர் முகமது பதவி விலகினார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்