TNPSC Thervupettagam

இந்தியா-மியான்மர் இடையே 11 ஒப்பந்தங்கள் கையெழுத்து

October 31 , 2017 2619 days 817 0
  • மியான்மர் சென்றுள்ள இந்தியப் பிரதமர் அந்நாட்டுடன் பல்வேறு துறைகளில் இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்தும் வகையில், ஒப்பந்தங்களை ஏற்படுத்தியுள்ளார்.
  • இந்தியா-மியான்மர் இடையே கடல்சார் பாதுகாப்பில் ஒத்துழைப்பு அளிப்பது, இரு நாடுகளும் தங்கள் நாட்டு கடற்பகுதியில் அனுமதிக்கப்பட்டுள்ள வர்த்தக மற்றும் சரக்கு கப்பல்கள் பற்றிய விவரங்களைப் பகிர்ந்து கொள்வது, இந்தியா-மியான்மர் இடையே, வரும் 2020-ஆம் ஆண்டு வரை கலாசார பரிமாற்ற நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்வது, தேர்தல் பணிகளில் தொழில்நுட்ப ஒத்துழைப்பைப் பெறுவதற்காக, இந்தியத் தேர்தல் ஆணையம் - மியான்மர் தேசியத் தேர்தல் ஆணையம் இடையேயான ஒப்பந்தம், இந்திய பிரஸ் கவுன்சில் - மியான்மர் பிரஸ் கவுன்சில் இடையான ஒப்பந்தம், மியான்மரின் யாமேதின் நகரில் உள்ள பெண் காவலர்கள் பயிற்சி மையத்தை மேம்படுத்துவது தொடர்பான ஒப்பந்தம், மருத்துவத் துறையில் ஒத்துழைப்பு உள்பட 11 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்