2010 ஆம் ஆண்டில் 88 ஆக இருந்த இந்தியாவின் யானை வழித்தடங்களின் எண்ணிக்கையானது 40% அதிகரித்து 150 ஆக உயர்ந்துள்ளது.
19% வழித்தடங்களை யானைகள் பயன்படுத்துவது குறைந்துள்ளதோடு மேலும் 10 வழித் தடங்களானது சேதங்கள் காரணமாக அவற்றிற்கு மறுசீரமைப்பு தேவைப் படுவதாக அறிக்கை குறிப்பிடுகிறது.
மஹாராஷ்டிராவில் உள்ள விதர்பா, மத்தியப் பிரதேசம், வடக்கு ஆந்திரப் பிரதேசம் மற்றும் வடகிழக்கு மாநிலங்கள் போன்ற பகுதிகளில் யானை வாழ்பகுதிகளின் பரந்த விரிவாக்கமானது அனுசரிக்கப் பட்டது.
மேற்கு வங்காளத்தில் மொத்தம் 26 யானைகள் வழித்தடங்கள் உள்ள நிலையில் இது இந்தியாவின் மொத்த வழித் தடங்களில் 17% ஆகும்.