இரஷ்யாவை இந்தியாவுடன் இணைக்கும் புது கடல் வழிப்பாதையை இந்தியா முன்மொழிந்துள்ளது.
இந்த புதிய கடல்வழிப்பாதை இந்தியாவை வடகிழக்கு ஆசியா மற்றும் மேற்கு பசுபிக் பகுதிகளோடு இணைக்கவல்லது.
இந்த முன்மொழியப்பட்டுள்ள புது நேரடி கடல் வழிப்பாதையானது இந்தியாவின் சென்னை துறைமுகத்திலிருந்து இரஷ்யாவின் விளாடிவோஸ்டாக் இடையில் அமையும்.
நடப்பில், இந்தியாவிலிருந்து தூரத்திலுள்ள கிழக்கு இரஷ்யாவிற்கு சரக்கு போக்குவரத்தை ஐரோப்பாவின் வழியே மேற்கொள்ள வேண்டியுள்ளதால் 40 நாட்கள் ஆகின்றன. இதை ஒப்பிடுகையில் மொழியப்பட்டுள்ள புதிய பாதையில் சரக்கு போக்குவரத்து 24 நாட்களிலேயே மேற்கொள்ளப்படும்.
சீனாவின் இலட்சிய திட்டமான கடல்வழி பட்டு பாதை தொடக்கத்திற்கு போட்டியாகவும் ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவை இணைக்கும் ஒரு பாலமாகவும் இத்தொடக்கம் கருதப்படுகின்றது.