TNPSC Thervupettagam

இந்தியா – ரஷ்யா பிரதிநிதிகள் சந்திப்பு

December 24 , 2017 2572 days 880 0
  • இந்தியா மற்றும் ரஷ்யா நாடுகளுக்கு இடையேயான இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீடுகளை வலுப்படுத்தும் விதமாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜும், ரஷ்யாவின் துணைப் பிரதமர் டிமிட்ரி ரோகோசினும் கலந்து ஆலோசனை நடத்தினர்.
  • இரு நாட்டுப் பிரதிநிதிகளும் இணைந்து ‘வர்த்தகம், பொருளாதாரம், அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கலாசார கூட்டுறவு தொடர்பான இந்தியா-ரஷ்யா சர்வதேச அரசாங்க ஆணையத்தின் [India-Russia Inter-Governmental Commission on Trade, Economic, Scientific, Technological and Cultural Cooperation (IRIGC-TEC)]’ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினர்.
  • இந்த சந்திப்பில் எட்டப்பட்ட முக்கிய முடிவுகள்:
    • வர்த்தகம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு தொடர்பான கூட்டுப் பணிக்குழுவின் தரத்தை துணை அமைச்சர் / வர்த்தகச் செயலாளர் அளவில் உயர்த்துதல்.
    • வர்த்தகத்திற்கான தடைகளை விவாதிக்கவும், நீக்கவும் வழிமுறையை உருவாக்குதல்
  • மேலும், இரு நாடுகளுக்கும் இடையே விவசாயம் மற்றும் மருந்துத் துறைகளில் நல்லுறவை மேம்படுத்துவதற்காக செயற்குழுக்களை உருவாக்கியுள்ளன.
  • இரு நாட்டு சுங்க நிர்வாகங்களுக்கும் இடையில் சரக்குகள் வருகை / பரிமாற்றம் குறித்த தரவுகளை எளிதாக பரிமாறிக்கொள்ளும் ஒப்பந்தத்தினை விரைந்து செயல்படுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்