துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்களுக்குச் செல்லும் வழியில் இந்தியாவின் நிலச் சுங்க நிலையங்களைப் பயன்படுத்தி வங்காள தேசத்திலிருந்து மூன்றாம் நாடுகளுக்கு சரக்குகளை ஏற்றுமதி செய்ய வழி வகுத்த முக்கியப் பன்னாட்டுச் சரக்கு மையத்தின் செயல்பாட்டினை இந்தியா நிறுத்தியுள்ளது.
இந்த மையமானது பூடான், நேபாளம் மற்றும் மியான்மர் போன்ற நாடுகளுக்கு வங்க தேசத்தினால் மேற்கொள்ளப்படும் ஏற்றுமதிக்கான சீரான வர்த்தகப் பாய்வுகளைச் செயல்படுத்தியது.
இது 2020 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் இந்தியாவினால் வங்காளதேசத்திற்கு வழங்கப் பட்டது.
உலக வர்த்தக அமைப்பின் விதிகளின்படி, குறிப்பாக 1994 ஆம் ஆண்டு கட்டண வீதங்கள் மற்றும் வணிகம் தொடர்பான பொது ஒப்பந்தத்தின் (GATT) Vவது பிரிவின் படி, WTO அமைப்பின் அனைத்து உறுப்பினர் நாடுகளும் நிலத்தினால் சூழப்பட்ட நாடுகளுக்குச் செல்லும் மற்றும் அந்தந்த நாடுகளிலிருந்து அனுப்பப் படும் பல்வேறு பொருட்களுக்குப் போக்குவரத்துச் சுதந்திரத்தை அனுமதிக்க வேண்டும்.