இந்தியா-வங்காளதேசம் விரிவான பொருளாதாரக் கூட்டு ஒப்பந்தம்
September 13 , 2022 679 days 338 0
இந்தியா மற்றும் வங்காளதேசம் ஆகியவை விரைவில் இருதரப்பு விரிவான பொருளாதாரக் கூட்டு ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகளைத் தொடங்க உள்ளன.
2021-22 ஆம் ஆண்டில், தெற்காசியாவில் இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகப் பங்குதாரராகவும், உலகளவில் இந்திய ஏற்றுமதிக்கான நான்காவது பெரிய நாடாகவும் வங்காளதேசம் உருவெடுத்துள்ளது.
இந்தியா வங்காளதேசத்தின் இரண்டாவது பெரிய வர்த்தகப் பங்குதாரராகவும், ஆசியாவிலேயே அதன் மிகப்பெரிய ஏற்றுமதிச் சந்தையாகவும் உள்ளது.
விரிவான பொருளாதாரக் கூட்டு ஒப்பந்தம் ஆனது இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக இடைவெளியைக் குறைப்பதை ஒரு முக்கிய நோக்கமாக கொண்டு அத்துடன் சரக்குகள், சேவைகள் மற்றும் முதலீட்டு வர்த்தகத்தில் கவனம் செலுத்தவும் வாய்ப்பு உள்ளது.