- 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 12 மார்ச் அன்று “இந்தியா-வழிநடத்தும் காலநிலைத் தீர்வுகள்” என்ற ஒரு ஆவணத்தை மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சர் ஹர்ஷ் வர்தன் வெளியிட்டார்..
- இந்த ஆவணமானது பருவநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுதல் மற்றும் அவற்றை ஏற்றுக் கொள்ளுவதற்காக இந்தியா மேற்கொண்டு வரும் முக்கியமான நடவடிக்கைகளைக் குறிப்பிடுகின்றது.
இந்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சில முக்கியமான முன்னெடுப்புகள்
- பருவநிலை மாற்றம் மீதான இந்தியாவின் தேசிய செயல் திட்டம்.
- இது சூரியஒளித் திட்டம், மேம்படுத்தப்பட்ட ஆற்றல் திறன், நீடித்த வாழிடம், நீர், நீடித்த இமாலய சுற்றுச்சூழல், பசுமை இந்தியா, நீடித்த விவசாயம் மற்றும் பருவநிலை மாற்றம் குறித்த யுக்திசார் அறிவு ஆகிய 8 முக்கியமான திட்டங்களைக் கொண்டிருக்கும்.
- சர்வதேச சூரியசக்தி கூட்டிணைவு (ISA)
- பருவநிலை மாற்றம் மீதான மாநில செயல் திட்டம் (SAPCC)
- மின்னணு போக்குவரத்திற்கான “பேம்” (FAME) திட்டம்
- பொலிவுறு நகரங்களுக்கான புனரமைப்பு மற்றும் நகர சீரமைப்பிற்கான அடல் திட்டம்
- தூய சமையல் எரிபொருளைப் பெறுவதற்கான பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா
- ஆற்றல் திறனுள்ள LED விளக்குகளைப் பொருத்துவதற்கான உஜாலா திட்டம்
- சுவச் பாரத் திட்டம்