TNPSC Thervupettagam

இந்தியா – அமெரிக்கப் பாதுகாப்பு துறை ஒப்பந்தம் 2024

October 22 , 2024 34 days 93 0
  • இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் ஆனது ஆயுதங்கள் பொருத்தப்பட்ட உயர் மட்ட பகுதிகளில் இயங்கக்கூடிய நீண்ட நேரம் செயல்படக்கூடிய (HALE) தொலை தூரத்தில் இருந்து இயக்கும் வகையிலான MQ-9B எனப்படும் 31 விமான அமைப்புகளை (RPAS) கொள்முதல் செய்வதற்கான 3.5 பில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தத்தினை மேற்கொண்டுள்ளன.
  • இந்த ஒப்பந்தத்தில் 170 AGM-114R ஹெல்ஃபயர் எறிகணைகளும்; 16 M36E9 ரக கட்டுப் படுத்தப் பட்ட ஹெல்ஃபயர் வான் பயிற்சி எறிகணைகளும்; 310 GBU-39B/B ரக சீரொளிக் கற்றை அடிப்படையிலான சிறிய விட்டம் கொண்ட குண்டுகளும் (SDB) உள்ளடக்கிய வகையில் பலவற்றின் கொள்முதலும் அடங்கும்.
  • ஹெல்ஃபயர் எறிகணை என்பது மிகவும் பிரபலமான மற்றும் குறுகிய தூர வரம்பு உடைய வானிலிருந்து நிலப் பரப்பினை நோக்கி ஏவக்கூடிய (சில நேரங்களில் வானில் இருந்த படியே ஏவக் கூடிய) சீரொளிக் கற்றையின் மூலம் மிக நன்கு வழிகாட்டப்பட்ட, குறையொலி சார்ந்த உத்திசார் எறிகணைகளில் ஒன்றாகும்.
  • AGM-114R ரக பல பயன்பாட்டு எறிகணையானது, ஹெல்ஃபைர் II ரக எறிகணையின் வரம்பிலான (7-11 கிலோ மீட்டர்) சமீபத்திய எறிகணையாகும்.
  • MQ-9B எனப்படும் 'ஹன்டர்-கில்லர்' ஆளில்லா விமானங்கள் அதிக உயரத்தில் நீண்ட நேரம் இயங்கக்கூடிய ஆளில்லா விமானங்கள் ஆகும்.
  • இவை 35 மணி நேரத்திற்கும் மேலாக பறக்கும் திறன் கொண்டவை மற்றும் நான்கு ஹெல்ஃபயர் எறிகணைகள் மற்றும் சுமார் 450 கிலோ குண்டுகளைச் சுமந்து செல்லும் திறன் கொண்டவை ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்