TNPSC Thervupettagam

இந்தியா – சீனா இடையிலான 75 ஆண்டுகால அரசுமுறை உறவுகள்

January 30 , 2025 24 days 82 0
  • இந்தியாவும் சீனாவும் கைலாஷ் மானசரோவர் யாத்திரையையும் இரு நாடுகளுக்கும் இடையேயான நேரடி விமான சேவைகளையும் 2025 ஆம் ஆண்டில் மீண்டும் தொடங்க ஒப்புக் கொண்டுள்ளன.
  • இது புது டெல்லிக்கும் பெய்ஜிங்கிற்கும் இடையேயான அரசுமுறை உறவுகள் நிறுவப் பட்ட 75 வது ஆண்டு நிறைவைக் குறிக்கிறது.
  • கைலாஷ் மானசரோவர் யாத்திரை மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான நேரடி விமான சேவைகள் ஆனது 2020 ஆம் ஆண்டில் நிறுத்தப்பட்டன.
  • முன்னதாக 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், முக்கிய எல்லைப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளும் ஆறு அம்சங்கள் மீதான  ஒப்பந்தங்களில் உடன்பாடுகளைத் தெரிவித்தன.
  • 2024 ஆம் ஆண்டின் முதல் 11 மாதங்களில் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான வர்த்தக மதிப்பு, 126.6 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டிய நிலையில் இது 1.9 சதவீதம் என்ற வருடாந்திர வளர்ச்சியைக் காட்டுகிறது.
  • சீன நாட்டுத் தூதரகமானது கடந்த ஆண்டு இந்தியர்களுக்கு 280,000 நுழைவு இசைவுச் சீட்டுகளை வழங்கியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்