TNPSC Thervupettagam

இந்தியா – நிகர முழுமையடைந்த எஃகு இறக்குமதியாளர்

April 14 , 2024 227 days 269 0
  • இந்தியாவின் எஃகு இறக்குமதியானது சுமார் 38 சதவீதம் அதிகரித்து 8.319 மில்லியன் டன்னாக உயர்ந்துள்ளது.
  • எனவே, இந்தியா 2023-24 ஆம் நிதியாண்டில் நிகர எஃகு இறக்குமதியாளராக மாறி உள்ளது.
  • முந்தைய 2022-23 ஆம் நிதியாண்டில் இந்தியா 6.022 மில்லியன் டன்கள் (MnT) அளவிலான நிறைவு செய்யப்பட்ட எஃகு இறக்குமதியை மேற்கொண்டுள்ளது.
  • கடந்த நிதியாண்டில் 6.71 மில்லியன் டன்னாக இருந்த எஃகு ஏற்றுமதியானது 11.50 சதவீதம் அதிகரித்து 7.48 மில்லியன் டன்னாக அதிகரித்துள்ளது.
  • 2022-23 ஆம் ஆண்டில் 123.19 மில்லியன் டன்னாக இருந்த நாட்டின் கச்சா எஃகு உற்பத்தி ஆனது 12.40 சதவீதம் அதிகரித்து 138.48 மில்லியன் டன்னாக உயர்ந்துள்ளது.
  • முழுமையடைந்த எஃகு பொருட்கள் நுகர்வு ஆனது சுமார் 135.95 மில்லியன் டன்னாக இருந்தது என்ற நிலையில், இது முந்தைய ஆண்டில் இருந்த 119.89 மில்லியன் டன் அளவை விட 13.40 சதவீதம் அதிகமாகும்.
  • தேசிய எஃகுக் கொள்கையின் கீழ், இந்தியா தனது வருடாந்திர எஃகு உற்பத்தித் திறனை 2030 ஆம் ஆண்டில் 300 மில்லியன் டன்னாகவும், தனிநபர் எஃகு நுகர்வினை 160 கிலோவாகவும் அதிகரிக்க இலக்கு நிர்ணயித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்