தென்னாப்பிரிக்க கடல்சார் ஆய்வுக் கப்பலான எஸ்.ஏ. அகுல்ஹாஸ் கப்பலானது லூயிஸ் (மொரீஷியஸ்) துறைமுகத்திலிருந்து அண்டார்டிக் பெருங்கடலுக்கான தனது பயணத்தைத் தொடங்கியுள்ளது.
தெற்குப் பெருங்கடல் அல்லது அண்டார்டிக் பெருங்கடலுக்கான 11வது இந்தியப் பயணம் இதுவாகும்.
முதலாவது பயணமானது 2004 ஆம் ஆண்டு ஜனவரி மற்றும் மார்ச் மாதங்களுக்கு இடையே நடைபெற்றது.
இந்தப் பயணக் குழுவினரால் வழங்கப்படும் தரவுகள் கோவாவில் உள்ள தேசியத் துருவ மற்றும் பெருங்கடல் ஆராய்ச்சி மையத்தின் (National Centre for Polar and Ocean Research - NCOPR) மூலம் ஆய்வு செய்யப்பட இருக்கின்றது.
NCOPR ஆனது மத்தியப் புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் செயல்படுகின்றது.
தற்போது, இந்த ஆய்வுக் கப்பலானது “பாரதி” நிலையத்தின் அருகில் பிரிட்ஸ் விரிகுடாவில் உள்ளது.
அண்டார்டிகாவில் அமைந்துள்ள இந்தியாவின் மூன்றாவது ஆய்வு நிலையம் பாரதி ஆகும்.
மற்ற இரண்டு ஆய்வு நிலையங்கள் தக்சின் கங்கோத்ரி மற்றும் மைத்ரி ஆகியவையாகும்.