TNPSC Thervupettagam

இந்தியாவின் 23வது சட்ட ஆணையம்

September 9 , 2024 26 days 104 0
  • 23வது சட்ட ஆணையத்தின் அமைக்க உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
  • இந்த ஆணையத்தின் பதவிக் காலம் 2027 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரையில் மூன்று ஆண்டுகள் ஆகும்.
  • இந்த ஆணையத்தில் ஒரு முழு நேரத் தலைவர் மற்றும் ஒரு உறுப்பினர்-செயலாளர் உட்பட நான்கு முழுநேர உறுப்பினர்களும் இருப்பர்.
  • இது வழக்கற்றுப் போன மற்றும் ரத்து செய்யக் கூடிய சட்டங்களை அடையாளம் கண்டு, ஏழைகளைப் பாதிக்கும் சட்டங்களை மதிப்பீடு செய்து, எந்தவொரு சட்டத்தின் மீதுமான தனது கருத்துக்களைத் தெரிவிக்கும்.
  • 23வது ஆணையம் ஆனது உணவுப் பாதுகாப்பு, வேலைவாய்ப்பின்மை ஆகியவற்றில் உலகமயமாக்கலின் தாக்கத்தை ஆராய்ந்து, விளிம்புநிலை மக்களின் நலன்களைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளைப் பரிந்துரைக்குமாறு கேட்டுக் கொள்ளப் பட்டு உள்ளது.
  • இந்த ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் உச்ச நீதிமன்றம் அல்லது உயர் நீதிமன்றங்களின் நீதிபதிகளாக அல்லது "பிற நிலையில் பணியாற்றும் நபர்களாக" இருக்கலாம்.
  • பொதுவாக இந்த ஆணையத்தின் தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதியே நியமிக்கப் படுவார்.
  • 22வது சட்ட ஆணையத்தின் தலைவராக கர்நாடக உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி ரிது ராஜ் அவஸ்தி இருந்தார்.
  • 22வது சட்ட ஆணையத்தின் பதவிக்காலம் ஆனது ஆகஸ்ட் 31 ஆம் தேதியுடன் நிறைவு அடைந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்