TNPSC Thervupettagam

இந்தியாவின் 3 புதிய குற்றவியல் சட்டங்கள்

July 4 , 2024 146 days 237 0
  • ஜூலை 01 ஆம் தேதி முதல் மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் நடைமுறைக்கு வந்ததையடுத்து, இந்தியா தனது குற்றவியல் நீதி முறையை முற்றிலுமாக மாற்றி அமைத்துள்ளது.
  • இந்தியத் தண்டனைச் சட்டத்திற்கு (IPC) மாற்றாக பாரதீய நியாய சன்ஹிதா (BNS) கொண்டு வரப்பட்டுள்ளது.
  • குற்றவியல் நடைமுறைச் சட்டத்திற்கு (CrPC) மாற்றாக பாரதீய நாக்ரிக் சுரக்சா  சன்ஹிதா (BNSS) கொண்டு வரப்பட்டுள்ளது.
  • இந்தியச் சாட்சியச் சட்டத்திற்கு மாற்றாக பாரதீய சாக்சய ஆதினியம் (BSA) கொண்டு வரப்பட்டுள்ளது.
  • மூன்று சட்டங்களும் 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப் பட்டன.
  • இந்த மூன்று புதிய சட்டங்கள் ஆனது, தண்டனை வழங்குவதை விட நீதி வழங்குவதன் மீது கவனம் செலுத்துகின்றன மற்றும் விரைவான நீதியை வழங்குவதை முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளன.
  • இது "அனைவருக்கும் நீதி கிடைக்கப் பெறுதல்" என்பதை வலியுறுத்தும் வகையில் நீதித்துறை மற்றும் நீதிமன்ற நிர்வாக அமைப்பை வலுப்படுத்துகிறது.
  • இந்தப் புதிய சட்டத்தின் கீழ் விசாரிக்கப்படும் முதல் வழக்கு மத்தியப் பிரதேசத்தின் போபால் நகரில் உள்ள நிஷாத்புரா காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்