தீபக் மிஸ்ராவைத் தொடர்ந்து இந்தியாவின் 46வது தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாய் அக்டோபர் மாதம் 3ம் தேதி பதவியேற்கவுள்ளார்.
தற்போதைய இந்தியத் தலைமை நீதிபதி அவர்கள் மிகவும் மூத்த நீதிபதியான ரஞ்சன் கோகாயை அவருக்கு அடுத்த தலைமை நீதிபதியாக பரிந்துரைத்துள்ளார்.
ஓய்வு பெறவிருக்கும் தலைமை நீதிபதி அவருக்கு அடுத்து அப்பதவிக்கு பின் தொடருபவரின் பெயரை ஓய்வு பெறுவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பே பரிந்துரைக்க வேண்டும் என்பது நடைமுறை வழக்கமாகும்.
வடகிழக்குப் பகுதிகளில் இருந்து தலைமை நீதிபதியாகும் முதல் நபராக கோகாய் உள்ளார்.
நவம்பர் மாதம் 17ஆம் தேதி அன்று 2019ஆம் ஆண்டு அவரது பதவிக் காலம் முடியும் வரை அவர் தலைமை நீதிபதியாக பதவி வகிப்பார்.