கோவாவின் பனாஜியில் இந்தியாவின் 48-வது சர்வதேச திரைப்பட திருவிழா நடத்தப்பட்டது.
மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகம், திரைப்பட திருவிழா இயக்குநரகம் மற்றும் கோவா அரசு ஆகியவற்றின் கூட்டிணைவு மூலம் இந்த திருவிழா நடத்தப்பட்டது.
இத்திருவிழாவில் இந்த ஆண்டின் மதிப்புமிக்க இந்திய திரையுலக ஆளுமை விருது (Indian Film Personality of the Year Award) அமிதாப் பச்சனுக்கு வழங்கப்பட்டது.
வாழ்நாள் சாதனையாளர் விருது கனடா நாட்டின் இயக்குநரான அடோம் எகோயனுக்கு வழங்கப்பட்டது.
சிறப்பு நடுவர் பரிசு “டேக் ஆஃப்” என்ற மலையாளத் திரைப்படத்திற்கு வழங்கப்பட்டது.
ராபின் கம்புல்லோவால் இயக்கப்பட்ட “120 பீட்ஸ் பர் மினிட்” (120 Beats Per Minute) என்ற பிரெஞ்ச் படத்திற்கு சிறந்த திரைப்படத்திற்கான விருது வழங்கப்பட்டது.
அர்ஜென்டீனிய நடிகர் நஹியூயல் பெரேஸ் பிஸ்காவர்டுக்கு சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டது.
சிறந்த நடிகைக்கான விருது இந்திய நடிகை பார்வதிக்கு வழங்கப்பட்டது.