TNPSC Thervupettagam

இந்தியாவின் 50 முக்கியமான ஜவுளி வகைகள்

October 8 , 2022 650 days 317 0
  • சமீபத்தில், யுனெஸ்கோ அமைப்பானது நாட்டின் 50 பிரத்தியேக மற்றும் முக்கியமான பாரம்பரிய ஜவுளி வகைகளின் பட்டியலை வெளியிட்டது.
  • தெற்காசியாவின் மகத்தான கலாச்சாரப் பாரம்பரியத்தைப் பாதுகாப்பதில் உள்ள முக்கிய சவால்களில் ஒன்று, அவை குறித்தத் தகவல்களின் முறையான காப்பகம் மற்றும் ஆவணங்கள் இல்லாததே ஆகும்.
  • இந்த இடைவெளியைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்ட இந்த வெளியீடானது, தேர்ந்தெடுக்கப் பட்ட 50 ஜவுளிகள் பற்றிய பல வருட ஆராய்ச்சிகளை ஒன்றிணைக்கச் செய்கிறது.
  • பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள சில ஜவுளி வகைகள்
    • தமிழ்நாட்டைச் சேர்ந்த சிக்கல்நாயக்கன்பேட்டை கலம்காரி
    • தமிழ்நாட்டைச் சேர்ந்த தோடா பூவேலைப்பாடுகள் மற்றும் சுங்குடி
    • ஹைதராபாத்தினைச் சேர்ந்த ஹிம்ரூ நெசவு வகைகள்
    • ஒடிசாவின் சம்பல்பூர் நகரைச் சேர்ந்த பந்தா கழுத்துப் பட்டி மற்றும் சாயமிட்டு மேற்கொள்ளப்படும் நெசவு வகைகள்
    • கோவாவினைச் சேர்ந்த குன்பி நெசவு வகை
    • குஜராத்தைச் சேர்ந்த மஷ்ரு நெசவு மற்றும் படோலா
    • மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஹிம்ரூ
    • மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த கரட்-கோரியல்
    • கர்நாடகாவினைச் சேர்ந்த இல்கல் மற்றும் லம்பாடி அல்லது பஞ்சாரா பூ வேலைப் பாடுகள்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்