குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணாவிற்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
அவர் ஆறு மாதங்கள் இந்தியாவின் தலைமை நீதிபதியாகப் பணியாற்ற உள்ளார்.
ஏற்கனவே வருமான வரித் துறையின் மூத்த அரசுத் தரப்புச் சட்ட ஆலோசகராகவும் அவர் பணியாற்றியுள்ளார்.
2004 ஆம் ஆண்டில், அவர் டெல்லியின் தேசியத் தலைநகர் பிராந்தியத்திற்கான அரசுத் தரப்பு சட்ட ஆலோசகராக (உரிமையியல்) நியமிக்கப்பட்டார்.
2005 ஆம் ஆண்டில் டெல்லி உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்ட அவர் 2006 ஆம் ஆண்டில் நிரந்தர நீதிபதியானார்.
2019 ஆம் ஆண்டு ஜனவரி 18 ஆம் தேதியன்று, நீதிபதி கண்ணா அவர்கள், முன்னதாக உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பணியாற்றாத நிலைமையிலேயே உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.