TNPSC Thervupettagam

இந்தியாவின் 5வது உள்நாட்டுமயமாக்கல் பட்டியல்

July 21 , 2024 5 hrs 0 min 25 0
  • பாதுகாப்பு அமைச்சகம் (MoD) ஆனது, 346 பாதுகாப்புப் பொருட்களை உள்ளடக்கிய ஐந்தாவது சாதகமான உள்நாட்டு தயாரிப்புகளின் கொள்முதல் பட்டியலை (PIL) அறிவித்துள்ளது.
  • இது பாதுகாப்புத் துறை உற்பத்தியில் ஆத்ம நிர்பர்தா (தன்னிறைவு) நிலையினை மேம்படுத்துவதனையும், பாதுகாப்புத் துறை சார் பொதுத்துறை நிறுவனங்கள் (DPSU) மேற்கொள்ளும் இறக்குமதியைக் குறைப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • பாதுகாப்பு அமைச்சகம் ஆனது 2020 ஆம் ஆண்டில் ஸ்ரீஜன் என்ற இணைய தளத்தினை அறிமுகப் படுத்தியது.
  • தனியார் தொழிற்சாலைகளுக்கு உள்நாட்டுமயமாக்கலுக்கான பாதுகாப்புப் துறை சார்ந்தப் பொருட்களை வழங்குவதற்காக பாதுகாப்புத் துறை சார் பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் சேவை வழங்கீட்டுத் தலைமையகங்களுக்கான (SHQs) ஒரு தளத்தை இது வழங்குகிறது.
  • அவை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை நிறுவனங்கள் (MSMEs) மற்றும் புத்தொழில் நிறுவனங்களை உள்ளடக்கியது.
  • 2024 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை, பாதுகாப்புத் துறை சார் பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் சேவை வழங்கீட்டுத் தலைமையகங்களால் சுமார் 36,000க்கும் மேற்பட்ட பாதுகாப்புப் பொருட்கள் உள்நாட்டுமயமாக்கலுக்காக தொழில்துறைக்கு வழங்கப் பட்டன.
  • அவற்றில் கடந்த மூன்று ஆண்டுகளில் 12,300க்கும் மேற்பட்ட பொருட்கள் உள்நாட்டு மயமாக்கப் பட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்