2024 ஆம் ஆண்டில் அமெரிக்காவிலிருந்து இந்தியாவின் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (LNG) இறக்குமதி ஆனது 252.28 டிரில்லியன் கன அடி அளவில் உயர்ந்தது.
இது தோராயமாக 7.14 பில்லியன் கன மீட்டர் (BCM) ஆகும்.
முந்தையதாக மேற்கொள்ளப்பட்ட மிக அதிகபட்ச இறக்குமதி, 2021 ஆம் ஆண்டில் வட அமெரிக்க நாட்டிலிருந்து இந்தியா மேற்கொண்ட 5.56 BCM LNG இறக்குமதி ஆகும்.
கத்தார் நாட்டிற்கு அடுத்தபடியாக, 2023 ஆம் ஆண்டில் இந்தியாவிற்கு LNG வழங்கும் இரண்டாவது மிகப்பெரிய நாடாக அமெரிக்காவினை முந்தி ஐக்கிய அரபு அமீரகம் திகழ்ந்தது.