விமான மேம்பாட்டு நிறுவனத்தால் (Aeronautical Development Agency) உருவாக்கப்பட்டு, வடிவமைக்கப்படும் இலகுரக போர் விமானமான (Light Combat Aircraft - LCA) தேஜஸ் வரிசையில், புதிய தலைமுறை போர் விமானத்தை உருவாக்குவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
அடுத்த தலைமுறை பாதுகாப்பு விமானமான மேம்படுத்தப்பட்ட நடுத்தர வகை தாக்குதல் போர் விமானத்தினை (Advanced Medium Combat Aircraft - AMCA) கட்டமைப்பதற்காக கோயம்புத்தூரில் உள்ள தனியார் நிறுவனத்திற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டமானது முதல் முறையாக ஒரு தனியார் நிறுவனம் உள்நாட்டிலேயே இராணுவ போர் விமானத்தினை உருவாக்குவது மட்டுமல்லாமல், பெங்களூருவிற்கு வெளியே இராணுவ போர் விமான மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட திட்டமிடப்படுவதும் இதுவே முதல் முறையாகும்.
இத்திட்டமானது, கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சூலூரில் செயல்படுத்தப்பட உள்ளது. இப்பகுதி தேஜஸ் போர் விமானப் படையின் கட்டுமானத் தளமாகவும் மாற வாய்ப்புள்ளது. மேலும் இத்திட்டமானது தமிழ்நாட்டின் முதல் மிகப்பெரும் பாதுகாப்புத்துறை விமான உற்பத்தித் திட்டமாகும்.