இந்தியா தனது NVS-1 NavIC செயற்கைக்கோளின் வெற்றிகரமான ஏவுதல் மற்றும் நிலை நிறுத்துதலைத் தொடர்ந்து சுயச் சார்பினை நோக்கிய ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது.
இந்தியாவின் ரூபிடியம் அணுக் கடிகாரம் அந்த செயற்கைக்கோளில் வைக்கப் பட்டு உள்ளது.
இதுவரையில் 5 நாடுகள் மட்டுமே தங்கள் விண்வெளி ஆய்வுத் திட்டங்களுக்காக இவற்றைப் பயன்படுத்தியுள்ளன.
ஒரு ரூபிடியம் அணுக் கடிகாரம் ஆனது, சீசியம் தரநிலை அளவிலான மற்ற அணுக் கடிகாரங்களைப் போலவே செயல்படுகிறது.