தற்போது 8180 மெகாவாட்டாக உள்ள நிறுவப்பட்ட அணுசக்தி திறன் ஆனது, 2031-32 ஆம் ஆண்டிற்குள் 22480 மெகாவாட்டாக அதிகரிக்கும்.
கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் அணுசக்தி உற்பத்தி திறனில் அணு ஆற்றல் ஆனது 70 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.
2013-14 ஆம் ஆண்டில் 4,780 மெகாவாட்டாக இருந்த இந்த அளவு ஆனது தற்போது 8,180 மெகாவாட்டாக உயர்ந்துள்ளது.
அணுமின் நிலையங்களில் ஆண்டுதோறும் பதிவாகும் மின் உற்பத்தியானது, 2013-14 ஆம் ஆண்டில் 34,228 மில்லியன் அலகுகளாக இருந்த நிலையில் இது 2023-24 ஆம் ஆண்டில் 47,971 மில்லியன் அலகுகளாக அதிகரித்துள்ளது.