சமீபத்தியக் கணக்கெடுப்பின் படி மத்தியப் பிரதேசத்தில் காணப்படும் கழுகுகளின் எண்ணிக்கை 12,981 ஆகக் கணக்கிடப்பட்டுள்ளது என்பதோடு இது கடந்த காலக் கணக்கெடுப்பை விட 2,136 அதிகரித்துள்ளது.
2024 ஆம் ஆண்டு கணக்கெடுப்பில், அம்மாநிலத்தில் உள்ள கழுகுகளின் எண்ணிக்கை 10,845 ஆகக் கணக்கிடப்பட்டது.
கடந்த ஆறு ஆண்டுகளில், அம்மாநிலத்தில் உள்ள பறவை இனங்களின் எண்ணிக்கை 35 சதவீதம் அதிகரித்துள்ளது.
2019 ஆம் ஆண்டில், மத்தியப் பிரதேசத்தில் 8,397 கழுகுகள் இருந்தன, அதன் பின்னர் கழுகுகளின் எண்ணிக்கை சீராக அதிகரித்து வருகிறது.
2021 ஆம் ஆண்டில், அந்த மாநிலத்தில் உள்ள கழுகுகளின் எண்ணிக்கை 9,446 ஆக இருந்தது.
சமீபத்தியக் கணக்கெடுப்பின்படி, மத்தியப் பிரதேசத்தில் ஏழு வகையான கழுகுகள் உள்ளன.
அவற்றில் நான்கு உள்நாட்டு இனங்கள் மற்றும் மீதமுள்ள மூன்று இனங்கள் வலசை வருபவையாகும்.