TNPSC Thervupettagam

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு

April 7 , 2024 230 days 300 0
  • இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 2024 ஆம் ஆண்டு மார்ச் 29 ஆம் தேதி நிலவரப்படி 645.6 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டியது.
  • அந்நியச் செலாவணி கையிருப்பு ஆனது 2.95 பில்லியன் டாலர் அதிகரித்துள்ளது.
  • இந்திய ரிசர்வ் வங்கியின் வெளிநாட்டுப் பண மதிப்புகள் (FCAs) ஆனது 2.35 பில்லியன் டாலர் அதிகரித்து 570.62 பில்லியன் டாலராக உள்ளது.
  • தங்கம் கையிருப்பு 673 மில்லியன் டாலர் உயர்ந்து 52.16 பில்லியன் டாலராக இருந்த அதே சமயம் சிறப்பு வரைவு உரிமைகள் (SDR) சுமார் 73 மில்லியன் டாலர் குறைந்து 18.15 பில்லியன் டாலராக இருந்தது.
  • சர்வதேச நாணய நிதியத்தில் உள்ள கையிருப்பு நிலையானது சுமார் 2 மில்லியன் டாலர் குறைந்து 4.66 பில்லியன் டாலராக உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்