TNPSC Thervupettagam

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு

January 6 , 2020 1788 days 907 0
  • 2019 ஆம் ஆண்டு டிசம்பர் 27 ஆம் தேதியுடன் முடிவடைந்த 2019 ஆம் ஆண்டிற்கான இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பானது 457.468 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டியுள்ளது.
  • இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்புகளானவை பெருவாரியாக அமெரிக்க அரசாங்கப் பத்திரங்கள் மற்றும் நிறுவனப் பத்திரங்களின் வடிவங்களிலும் கிட்டத்தட்ட 6% அந்நியச் செலாவணி இருப்புகள் தங்கத்திலும் உள்ளன.
  • வெளிநாட்டு நாணயக் கையிருப்புகளில் அமெரிக்கக் கருவூலப் பத்திரங்களில் செய்யப்பட்டுள்ள முதலீடுகள், தேர்ந்தெடுக்கப்பட்ட பிற அரசாங்கங்களின் பத்திரங்கள் மற்றும் வெளிநாட்டு மத்திய & வணிக வங்கிகளில் உள்ள வைப்புகள் ஆகியவையும் அடங்கும்.
  • சீனக் குடியரசிற்கு (தைவான்) சற்று குறைவாக, அந்நிய செலாவணி இருப்புக்களின் நாடுகளின் பட்டியலில் இந்தியா 7வது இடத்தில் (2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாத நிலைமையின் படி) உள்ளது.

கையிருப்பு நிலை

  • வெளிநாட்டு நாணயக் கையிருப்புகள் - 424.936 பில்லியன் அமெரிக்க டாலர்.
  • தங்கக் கையிருப்பு நிலை - 27.392 பில்லியன் அமெரிக்க டாலர்.
  • சர்வதேச நாணய நிதியத்தின் சிறப்பு எடுப்பு உரிமைகள் - 1.441 பில்லியன் அமெரிக்க டாலர்.
  • சர்வதேச நாணய நிதியத்தில் இந்தியாவின் கையிருப்பு நிலை - 3.7 பில்லியன் அமெரிக்க டாலர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்