TNPSC Thervupettagam

இந்தியாவின் அந்நியச் செலாவணிக் கையிருப்பு

June 11 , 2020 1631 days 683 0
  • நோய்த் தொற்றிற்கு மத்தியில், இந்தியாவின் அந்நியச் செலாவணிக் கையிருப்பானது அதிகரித்து வருகின்றது. இது விரைவில் 500 பில்லியன் அமெரிக்க டாலர் என்ற அளவை அடைய இருக்கின்றது.
  • இந்தியாவின் அந்நியச் செலாவணிக் கையிருப்பானது 1991 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் 5.8 பில்லியன் அமெரிக்க டாலர் என்ற நிலையிலிருந்து தற்பொழுது வரை அதிகரித்து வருகின்றது.
  • அந்நியச் செலாவணியின் இந்த அதிகரிப்பானது டாலருக்கு எதிராக இந்திய ரூபாயின் மதிப்பை வலுப்படுத்த உதவுகின்றது.
  • அந்நியச் செலாவணிக் கையிருப்பு என்பது இந்தியாவினால் சேர்த்து வைக்கப்பட்ட, மற்றும் இந்திய ரிசர்வ் வங்கியினால் கட்டுப்படுத்தப்பட்ட தங்கம், சர்வதேச நாணய நிதியத்தின் சிறப்பு எடுப்பு உரிமைகள் மற்றும் அயல்நாட்டு நாணயச் சொத்துகள் போன்ற வடிவத்தில் உள்ள அயல்நாட்டுச் சொத்துகளாகும்.
  • அயல்நாட்டு நாணயச் சொத்துகளில் முதலீட்டுச் சந்தைகளில் மேற்கொள்ளப்படும் முதலீடுகள், அந்நிய நேரடி முதலீடு மற்றும் வணிக ரீதியான  அயலகக் கடன் வாங்கல் ஆகியவை உள்ளடங்கும்.
  • ஏறத்தாழ 64% அயல்நாட்டு நாணயக் கையிருப்புகள் அயல்நாடுகளின் கருவூலப் பத்திரங்கள் போன்ற பங்குகளில் முக்கியமாக அமெரிக்கா போன்ற நாடுகளில் உள்ளன.
  • இந்தியா 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரையில் மொத்தம் 653.01 டன்கள் அளவிலான தங்கத்தைக் கொண்டுள்ளது.
  • இது இங்கிலாந்து வங்கி மற்றும் சர்வதேச தீர்வுகளுக்கான வங்கி ஆகியவற்றில் பாதுகாப்பான முறையில் வெளிநாடுகளில் வைக்கப் பட்டுள்ளன. மீதமுள்ள தங்கம் உள்நாட்டிலேயே வைக்கப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்