TNPSC Thervupettagam

இந்தியாவின் அரணைகள்

October 30 , 2020 1492 days 629 0
  • சமீபத்தில், இந்திய விலங்கியல் ஆய்வு மையமானது 'இந்தியாவின் அரணைகள்' என்ற தலைப்பில் அரணைகள் (ஸ்கின்க்ஸ்) பற்றிய ஓர் ஆய்வைக் மேற்கொண்டு உள்ளது.
  • அரணைகள் விஷமற்றவை, அதிக எச்சரிக்கை உடையவை, சுறுசுறுப்பானவை மற்றும் வேகமாக நகரக் கூடியவையாகும். மேலும் அவை பலவிதமான பூச்சிகள் மற்றும் சிறிய முதுகெலும்புகளற்ற உயிர்களை உண்ணக் கூடியவை ஆகும்.
  • இந்தியாவில் 62 வகையான அரணைகள் உள்ளன என்பதை இவ்வறிக்கை வெளிப்படுத்துகிறது.
  • உலகின்  4%க்கும் குறைவான அரணைகளே இந்தியாவில் உள்ளன.
  • இந்தியாவில் 62 வகையான அரணைகள் காணப்படுகின்றன. அவற்றில் 57% (33 இனங்கள்) பூர்வீக வகையைச் சேர்ந்தவையாகும்..
  • மேற்குத் தொடர்ச்சி மலையில் 24 இனங்கள் உள்ளன.  அவற்றில் 18 இனங்கள் அப்பகுதியைப் பூர்வீகமாகக் கொண்டவையாகும்.
  • தக்காணத் தீபகற்ப பிராந்தியத்தில் 19 இனங்கள் உள்ளன. அவற்றில் 13 இனங்கள் அப்பகுதியைப் பூர்வீகமாகக் கொண்டவையாகும்.
  • அரணைகளின் நான்கு வகைகள்:
    • செப்சோபிஸ்: கிழக்குத் தொடர்ச்சி மலையின் வடக்குப் பகுதியில் செப்சோபிஸ் பங்டடஸ் பூர்வீகமாகக் காணப்படுகிறது.
    • பார்குடியா: இவை கிழக்குக் கடற்கரையின் மலைகள் மற்றும் கடலோரச் சமவெளிகளில் காணப்படும் கால்களற்ற அரணைகள் ஆகும்.
    • ஒடிசாவின் சில்கா ஏரியில் உள்ள பார்குட் தீவில் மட்டுமே பார்குடியா இன்சுலாரிஸ் என்ற இனம் காணப் படுவதாக நம்பப் படுகிறது.
    • பர்குடியா மெலனோஸ்டிக்டா விசாகப் பட்டினத்தைப் பூர்வீகமாகக் கொண்டது ஆகும்.
    • கெஸ்ட்லியா: இவை நீல வால் கொண்ட தரை அரணைகள் என்றும் அழைக்கப் படுகின்றன. மேலும் அவை மேற்குத் தொடர்ச்சி மலைகளைப் பூர்வீகமாகக் கொண்டவையாகும்.
    • ரிஸ்டெல்லா: இவை பூனை அரணைகள் என்று அழைக்கப் படுகின்றன. மேலும் இவை மேற்குத் தொடர்ச்சி மலையின் தெற்குப் பகுதியினைப் பூர்வீகமாகக் கொண்டவையாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்