TNPSC Thervupettagam
February 1 , 2025 21 days 142 0
  • இமாச்சலப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த விவசாயியான ஹரிமன் சர்மா, இந்திய வேளாண்மையில் ஒரு மாறுதல் மிக்கப் பங்களிப்பினை ஆற்றியதற்காகச் சமீபத்தில் பத்மஸ்ரீ விருதினைப் பெற்றார்.
  • அவர் 'இந்தியாவின் ஆப்பிள் மனிதன்' என்று பிரபலமாக அறியப்படுகிறார்.
  • கீழ் மட்ட மலைகளில் மிகவும் வெப்பமான சூழ்நிலையில் பயிரிடக்கூடிய ஓர் ஆப்பிள் வகையை உருவாக்கியதன் மூலம் அவர் ஆப்பிள் சாகுபடியில் புரட்சியை ஏற்படுத்தி உள்ளார்.
  • ஆப்பிள்களைக் குளிர்ந்தச் சூழ்நிலையில் மைய மற்றும் உயர் மட்ட மலைகளிலும் மட்டுமே வளர்க்க முடியும் என்று முன்னர் நம்பப்பட்டது.
  • அவர் HRMN-99 எனப்படும் புதுமையான, சுய-மகரந்தச் சேர்க்கை செய்யும், குறைந்த குளிர்ச் சூழல் தேவையான ஆப்பிள் வகையை உருவாக்கினார்.
  • HRMN-99 என்பது கோடை வெப்பநிலை 40-45°C அளவினை எட்டும் அதிவெப்ப மண்டல, துணை வெப்பமண்டல மற்றும் சமவெளி இடங்களில் கூட செழித்து வளர்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்