மத்திய ஜல் சக்தித் துறை அமைச்சகத்தின் வருடாந்திரத் தரவரிசையில், 2022 ஆம் ஆண்டிற்கான வளங்காப்பு மற்றும் மேலாண்மைப் பிரிவில் நாமக்கல் மாவட்டமானது இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளது.
இந்த மாவட்டத்தின் மக்கள்தொகை 1.7 மில்லியன் ஆகும்.
இது அதன் நீர்ப் பற்றாக்குறை சார்ந்தச் சவால்களை வெற்றிகரமாக எதிர்கொண்டு, நிலத்தடி நீர் இருப்பு அடிப்படையில் இந்தியாவின் இரண்டாவது சிறந்த மாவட்டமாக மாறியுள்ளது.
2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இந்த மாவட்டத்தின் சராசரி நீர்மட்டமானது தரை மட்டத்திலிருந்து 10.35 மீட்டர் கீழான நிலையில் இருந்தது.
அடுத்த ஆண்டு அது ஜனவரி மாதத்தில் தரை மட்டத்திலிருந்து 11.48 மீட்டர் கீழான நிலையில் இருந்தது.
2020 ஆம் ஆண்டில் ஜனவரி மாதத்தில், இது தரை மட்டத்திலிருந்து 9.57 மீட்டராகக் குறைந்த நிலையில், 2021 ஆம் ஆண்டில், இது தரை மட்டத்திலிருந்து 9.82 மீட்டராகவும்; 2022 ஆம் ஆண்டில் தரை மட்டத்திலிருந்து 6 மீட்டராகவும் கொண்டு வரப்பட்டது.