இந்திய அரசானது சாபஹாரை அடுத்து, மியான்மரில் உள்ள சிட்வி எனப்படும் தனது இரண்டாவது வெளிநாட்டுத் துறைமுகத்தினை இயக்குவதற்கான உரிமையை பெற்று உள்ளது.
இந்தியா போர்ட்ஸ் குளோபல் (IPGL) நிறுவனம் ஆனது கலாதான் ஆற்றில் அமைந்துள்ள துறைமுகத்தின் முழு செயல்பாடுகளையும் கையகப்படுத்தும் ஒரு முன்மொழிதலுக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் (MEA) ஒப்புதல் அளித்துள்ளது.
IPGL என்பது ஜவஹர்லால் நேரு துறைமுக அமைப்பு (JNPT) மற்றும் தீன்தயாள் துறைமுக அமைப்பு (முன்னதாக காண்ட்லா துறைமுக அமைப்பு) ஆகியவற்றின் கூட்டு இணைவு ஆகும்.
சிட்வி துறைமுகமானது கலாதான் பல்நோக்குப் போக்குவரத்து திட்டத்தின் ஒரு பகுதி ஆகும்.
இத்திட்டமானது கிழக்கு இந்தியத் துறைமுகமான கொல்கத்தாவைக் கடல் வழியாக மியான்மரில் உள்ள சிட்வி துறைமுகத்துடன் இணைப்பதையும், மேலும் சிட்வி துறைமுகத்தை கலாதான் நதி நீர்வழி வழியாக மியான்மரில் உள்ள பலேட்வாவுடன் இணைப்பதையும், மேலும் பலேட்வாவை சாலை வழியாக மிசோரமில் உள்ள சோரின்புய் என்ற பகுதியுடன் இணைப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.