15 ஆண்டுகளுக்குப் பிறகு, நாட்டின் தனித்துவமான சுகாதாரச் சவால்களை நிவர்த்தி செய்வதற்காக வேண்டி இந்தியா இறுதியாக புதுப்பிக்கப்பட்ட வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
இதுவரையில், இந்தியா உடல் பருமன் மதிப்பீட்டிற்கான முதன்மை அளவீடாக உடல் நிறைக் குறியீட்டை (BMI) சார்ந்திருந்தது.
திருத்தப்பட்ட இக்கட்டமைப்பு ஆனது உடல் பருமன் கண்டறிதல் மற்றும் சிகிச்சைக்கு மிகவும் விரிவான அணுகுமுறையை வழங்குகிறது.
இந்தியர்களிடையே உடல் பருமன் மற்றும் அதனுடன் தொடர்புடைய பல உடல்நல அபாயங்களைச் சமாளிப்பதற்கு ஒரு தனிப்பயனாக்கப்பட்ட உத்தியின் அவசியத்தை இது வலியுறுத்துகிறது.
உடல் பருமனுக்கான இரண்டு-நிலை வகைப்பாடானது முதல் நிலை மற்றும் இரண்டாம் நிலை உடல் பருமன் என பிரிக்கப்பட்டுள்ளது.
முதலாவது நிலை உடல் பருமன் என்பது உறுப்புச் செயல்பாடு அல்லது அன்றாட நடவடிக்கைகளில் குறிப்பிடத்தக்க தாக்கம் எதுவும் இல்லாமல் அதிகரித்த உடல் கொழுப்பாகக் குறிப்பிடப்படுகிறது (BMI > 23 kg/m²).
இரண்டாம் நிலை உடல் பருமன் என்பது வயிற்றுக் கொழுப்பு, அதிக அளவு இடுப்பு சுற்றளவு மற்றும் உறுப்பு சேதம் ஆகியவற்றால் வகைப்படுத்தப்படும் தீவிர நிலை உடல் பருமன் என்று குறிப்பிடப்படுகிறது.