இந்தியா சமீபத்தில் அதன் பசுமை இல்ல வாயு உமிழ்வுகள் (GHG) குறித்த விவரங்கள் மற்றும் அதன் உமிழ்வைக் கட்டுப்படுத்துவதற்கு மேற்கொண்ட முயற்சிகள் பற்றிய சமீபத்திய அறிக்கையினைச் சமர்ப்பித்துள்ளது.
பருவநிலை மாற்றத்திற்கான ஐக்கிய நாடுகளின் கட்டமைப்பு உடன்படிக்கையின் (UNFCCC) கீழ், வளர்ந்து வரும் நாடுகள் பருவநிலை நடவடிக்கைக்கான தங்கள் முயற்சிகள் பற்றிய விரிவான அறிக்கையைச் சமர்ப்பிக்க கடமைப்பட்டுள்ளன.
2005 மற்றும் 2020 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில், உமிழ்வின் செறிவு ஆனது இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 36% குறைந்துள்ளது.
இந்தியாவின் மொத்த GHG உமிழ்வுகள் 2,959 மில்லியன் டன் கார்பன் டை ஆக்சைடுக்கு (CO2) சமமானதாக உள்ளது.
வனவியல் துறை மற்றும் நில வளங்களின் கார்பன் பிடிப்பினைக் கணக்கிட்ட பிறகு, நாட்டின் நிகர உமிழ்வு ஆனது 2,437 மில்லியன் டன்கள் டன் கார்பன் டை ஆக்சைடுக்கு (CO2) சமமானதாக இருந்தது.
மொத்தத் தேசிய உமிழ்வுகள் (நிலப் பயன்பாடு, நிலப் பயன்பாட்டு மாற்றம் மற்றும் வனவியல் உட்பட) 2019 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 7.93% குறைந்துள்ளது.
அதேசமயம், 1994 ஆம் ஆண்டு முதல் இது 98.34% அதிகரித்துள்ளது.
இந்த உமிழ்வுகளில் CO2 மட்டும் 80.53 சதவீதப் பங்கினைக் கொண்டுள்ளது, அதைத் தொடர்ந்து மீத்தேன் (13.32%), நைட்ரஸ் ஆக்சைடு (5.13%) மற்றும் இதர மற்றவை 1.02% பங்கினைக் கொண்டுள்ளன.
எரிசக்தி துறையில் இருந்து அதிகபட்சமாக 75.66% உமிழ்வுகள் பதிவாகியுள்ளது.
உமிழ்வுகளில் வேளாண் துறை 13.72 சதவீதமும், தொழில்துறைச் செயலாக்கங்கள் மற்றும் தயாரிப்பு பயன்பாடு மற்றும் கழிவுத் துறை ஆகியவை முறையே 8.06% மற்றும் 2.56 சதவீதமும் பங்களித்துள்ளன.
எரிசக்தி துறையின் உமிழ்வில் மின்சார உற்பத்தி மட்டும் 39% பங்கினைக் கொண்டு உள்ளது.