இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை இணைந்து புதிய உலக வர்த்தக மற்றும் தொழில்நுட்பச் சபையினை (TTC) நிறுவ உள்ளதாக அறிவித்துள்ளன.
வர்த்தக மற்றும் தொழில்நுட்பச் சபை என்பது இரு பங்குதார நாடுகளும் வர்த்தகம், நம்பகமான தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றில் உள்ள சவால்களை எதிர் கொள்ள வழிவகுக்கும் ஒரு உத்திசார் ஒருங்கிணைப்பு செயல்முறையாகும்.
வர்த்தக மற்றும் தொழில்நுட்பச் சபையின் கீழ், மூன்று குழுக்கள் நிறுவப்பட்டுள்ளன.
முதல் பணிக் கட்டுப்பாட்டுக் குழுவானது உத்திசார் தொழில்நுட்பங்கள், எண்ணிம ஆளுமை மற்றும் எண்ணிம இணைப்பு ஆகியவை தொடர்பானது.
இரண்டாவது பணிக் கட்டுப்பாட்டுக் குழுவானது பசுமை மற்றும் தூய்மையான ஆற்றல் தொழில்நுட்பங்கள் ஆகியவை தொடர்பானது.
மூன்றாவது பணிக் கட்டுப்பாட்டுக் குழுவானது வர்த்தகம், முதலீடு மற்றும் நெகிழ் திறன் மிக்க மதிப்புச் சங்கிலி ஆகியவை தொடர்பானது.
வர்த்தக மற்றும் தொழில்நுட்பச் சபையின் அமைச்சர்கள் கூட்டமானது வருடத்திற்கு ஒரு முறை நடைபெறும் என்ற நிலையில், அதற்கான இடமானது ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியா ஆகிய இரண்டிற்கும் இடையில் மாறி மாறி நிர்ணயிக்கப்படும்.
முதல் வர்த்தக மற்றும் தொழில்நுட்பச் சபை அமைப்பானது 2021 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் அமெரிக்காவுடன் இணைந்து உருவாக்கப்பட்ட நிலையில், அதன் பிறகு ஏற்படுத்தப் பட்ட இரண்டாவது வர்த்தக மற்றும் தொழில்நுட்பச் சபை இதுவாகும்.