TNPSC Thervupettagam

இந்தியாவின் எண்ணிமப் பொருளாதாரம் 2024-25

January 28 , 2025 26 days 95 0
  • இந்தியாவின் எண்ணிமப் பொருளாதாரம் ஆனது, நாட்டின் மற்ற பொருளாதாரத் துறைகளை விட இரண்டு மடங்கு வேகமாக வளரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • இது 2024–25 ஆம் ஆண்டின் இறுதியில் தேசிய வருமானத்தில் சுமார் 13.42% பங்கினைக் கொண்டிருந்தது என்பதோடு இது 2022–23 ஆம் ஆண்டில் 11.74% ஆக இருந்தது.
  • சர்வதேசப் பொருளாதார உறவுகள் குறித்த இந்திய ஆராய்ச்சிச் சபை (ICRIER) ஆனது இந்த அறிக்கையினைத் தயாரித்துள்ளது.
  • 2030 ஆம் ஆண்டிற்குள், இந்தியாவின் எண்ணிமப் பொருளாதாரமானது ஒட்டு மொத்த மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் ஐந்தில் ஒரு பங்கைக் கொண்டிருக்கும்.
  • 2022–23 ஆம் ஆண்டில் எண்ணிமப் பொருளாதாரம் (GVA) ஆனது, மொத்த மதிப்புக் கூட்டலில் 28.94 லட்சம் கோடி ரூபாய்க்கும் (~368 பில்லியன் டாலர்) மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 31.64 லட்சம் கோடி ரூபாய்க்கும் (~402 பில்லியன் டாலர்) சமமானதாக இருந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்