TNPSC Thervupettagam

இந்தியாவின் கடன் விகிதம்

April 20 , 2021 1189 days 565 0
  • COVID-19 தொற்று நெருக்கடியால் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கும் கடனுக்குமான விகிதமானது 74% என்ற அளவில் இருந்து 90% ஆக அதிகரித்துள்ளது என்று சர்வதேச நாணய நிதியம் சமீபத்தில் அறிவித்துள்ளது.
  • இது 2021 ஆம் ஆண்டில் 99% ஆக அதிகரிக்க உள்ளது.
  • பொருளாதார மீட்சிக்குப் பிறகு இது 80% ஆகக் குறைக்கப்படுவதாக அந்த சர்வதேச நிதி அமைப்பு தெரிவித்துள்ளது.
  • மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கடன் விகிதம் என்பது அதன் நாணயத்தின் அலகுகளில் அளவிடப்பட்ட அரசாங்கத்தின் கடனுக்கும் அதே அலகில் அளவிடப்பட்ட மொத்த உள்நாட்டு உற்பத்திக்கும் இடையிலான ஒரு விகிதமாகும்.
  • மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கடன் விகிதம் குறைவாக உள்ளது என்பதற்கான அர்த்தம் அந்த நாடு மேலும் கடன்களை வாங்காமல் கடன்களைத் திருப்பிச் செலுத்த போதுமான அளவிற்குப் பொருட்கள் மற்றும் சேவைகளை உற்பத்தி செய்து அவற்றை விற்பனை செய்வது என்பதாகும்.
  • இந்தியாவின் கடன் மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் விகிதம் 1991 ஆம் ஆண்டு முதல் 70% ஆக உள்ளது.
  • இந்தியாவில் பொதுக் கடன் என்பது மத்திய அரசின் மொத்தப் பொறுப்பாகும், இது இந்தியாவின் தொகுப்பு நிதியிலிருந்துச் செலுத்தப்பட வேண்டும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்