இந்தியாவின் கடற்கரை 50 ஆண்டுகளுக்குள் சுமார் பாதியளவு விரிவடைந்துள்ளது, அதாவது 1970 ஆம் ஆண்டில் 7,516 கி.மீ. ஆக இருந்த இந்தியக் கடற்கரை 2023-24 ஆம் ஆண்டில் 11,098 கி.மீ. ஆக அதிகரித்துள்ளது.
வங்காளம், குஜராத் மற்றும் கோவா போன்ற சில மாநிலங்களின் கடற்கரைகள் ஆனது விரிவடைந்துள்ள அதே நேரத்தில் புதுச்சேரியின் கடற்கரை 10.4% சுருங்கியுள்ளது.
குஜராத் மாநில அரசின் கடற்கரை மறு கணக்கீடு ஆனது இந்த அதிகரிப்பிற்கு அதிகப் பங்களிப்பை அளித்துள்ளது என்பதோடு 1970 ஆம் ஆண்டில் 1,214 கி.மீ. ஆக இருந்த அதன் கடற்கரை கடந்த 53 ஆண்டுகளில் கிட்டத்தட்ட இரட்டிப்பாகி 2,340 கி.மீ. ஆக அதிகரித்துள்ளது.
இந்த காலகட்டத்தில் மேற்கு வங்காளத்தின் கடற்கரையில் அதிகபட்ச சதவீதத்திலான அதிகரிப்பு பதிவாகியுள்ளது என்ற நிலையில் 157 கி.மீ. ஆக இருந்த அதன் கடற்கரை 357% அதிகரித்து 721 கி.மீ. ஆக அதிகரித்துள்ளது.
தேசிய அளவில், 1970 ஆம் ஆண்டு தரவுகளுடன் ஒப்பிடும் போது கடற்கரை அதிகரிப்பு 47.6% ஆக உள்ளது.
குஜராத் மிக நீளமான கடற்கரையைக் கொண்ட மாநிலமாக தனது நிலையைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.
புதியக் கணக்கெடுப்பின்படி, மறுமதிப்பீடு செய்யப்பட்ட 1,068 கி.மீ. நீளத்துடன் (முன்பு 906 கி.மீ) உடன் தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசத்தை (1,053 கி.மீ) முந்தியுள்ளது.
30 கி.மீ (5%) அதிகரிப்புடன் மிகக் குறைந்த அதிகரிப்பு பதிவாகியுள்ள ஒரு மாநிலமாக கேரளா உள்ளது.