TNPSC Thervupettagam

இந்தியாவின் கடலோரப் பகுதிகளில் சீறும் கடல் அலைகள்

May 9 , 2024 202 days 252 0
  • குவிந்து எழும் (சீறும்) கடல் அலைகள் எனப்படும் உயரமான கடல் அலைகள் கடலோர மாநிலங்களை தாக்கக் கூடும் என்று INCOIS கணித்துள்ளது.
  • மார்ச் மாதத்தில், கேரளாவின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில், இதில் ஆலப்புழா, கொல்லம் மற்றும் திருவனந்தபுரம் மாவட்டங்கள் மிக மோசமாகப் பாதிக்கப் பட்டன.
  • இத்தகைய வெள்ள நிகழ்வுகள் கேரளாவில் கள்ளக்கடல் என்று அழைக்கப் படுகின்றன.
  • இத்தகையப் புயல்களின் போது, ​​காற்றில் இருந்து தண்ணீருக்கு மிகப்பெரிய ஆற்றல் பரிமாற்றம் நடைபெறுவதால், மிக உயர்ந்த அலைகள் உருவாக வழிவகுக்கிறது.
  • இத்தகைய அலைகள் புயலின் மையப் பகுதியில் இருந்து கரையைத் தாக்கும் வரை ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் பயணிக்கும்.
  • வழக்கமாக, கேரளா போன்ற மாநிலங்கள் கடல் சீற்றம் உருவாகின்ற இந்தியப் பெருங் கடலின் தெற்குப் பகுதியில் பலத்த காற்றின் விளைவாக அலைகளை பெருமளவில் எதிர்கொள்கின்றன.
  • இந்த அலைகள் வடக்கு நோக்கிப் பயணித்து இரண்டு அல்லது மூன்று நாட்களில் கரையை அடையும்.
  • இவற்றை விட சுனாமி அலைகள் 10 மடங்கு வேகமானவையாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்