TNPSC Thervupettagam

இந்தியாவின் கிராமப்புறங்களில் சுகாதார நிலை குறித்த அறிக்கை 2024

September 1 , 2024 86 days 120 0
  • இந்தியாவின் கிராமப்புறங்களை மாற்றியமைத்தல் எனப்படும் அரசு சாரா அமைப்பு (NGO) மற்றும் மேம்பாட்டுத் தகவலளிப்புப் பிரிவு ஆகியவை இணைந்து இந்த கணக்கெடுப்பை மேற்கொண்டுள்ளன.
  • நாட்டில் உள்ள கிராமப்புறக் குடும்பங்களில் சுமார் பாதி குடும்பங்கள் மட்டுமே அரசு மருத்துவக் காப்பீட்டினைக் கொண்டுள்ளன.
  • 34% பேர் எந்தவிதமான சுகாதாரக் காப்பீட்டினைக் கொண்டிருக்கவில்லை. மேலும் கணக்கெடுக்கப் பட்டவர்களில் சுமார் 61% பேர் ஆயுள் காப்பீட்டினைக் கொண்டிருக்க வில்லை.
  • இந்தக் கணக்கெடுப்பில் 12.2% குடும்பங்கள் மட்டுமே பிரதான் மந்திரி ஜன் ஔஷதி கேந்திராக்களில் இருந்து மானிய விலையில் மருந்துகளைப் பெறுகின்ற அதே நேரம் 21% பேருக்கு எளிதில் அணுகக் கூடிய தொலைவில் மருந்துக் கடைகள் இல்லை.
  • ஐந்தில் ஒருவர் தங்கள் கிராமங்களில் வடிகால் அமைப்பு இல்லை என தெரிவித்து உள்ளனர்.
  • 23% பேர் மட்டுமே தங்கள் கிராமங்களில் மூடப்பட்ட வடிகால் வலையமைப்பைக் கொண்டிருந்தனர்.
  • 43% வீடுகளில் கழிவுகளை அகற்றுவதற்கான எந்த அறிவியல்பூர்வச் செயல்முறையும் இல்லை என்பதால் அவர்கள் தங்கள் கழிவுகளைக் கிடைக்கும் எல்லா இடங்களிலும் கொட்டுகின்ற நிலையில் உள்ளனர்.
  • 11% குடும்பங்கள் மட்டுமே உலர் கழிவுகளை எரித்து, தங்கள் ஈரக் கழிவுகளை உரமாக மாற்றுகின்றன.
  • 28% குடும்பங்கள் உள்ளாட்சிப் பஞ்சாயத்து அமைப்புகள் ஆனது வீட்டுக் கழிவுகளை சேகரிக்கத் திட்டங்களை வகுத்துள்ளதாக தெரிவித்துள்ளன.
  • குடும்ப உறுப்பினர் சார்ந்த பராமரிப்பாளர்கள் இல்லாத நிலையில் 10% குடும்பங்கள் மட்டுமே அண்டை வீடுகளின் ஆதரவைச் சார்ந்துள்ளன.
  • கர்ப்பிணிப் பெண்களுக்கான முக்கியப் பராமரிப்பாளர்களில் கணவர்கள் (62.7%), மாமியார் (50%) மற்றும் தாய்மார்கள் (36.4%) ஆகியோர் அடங்குவர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்