இந்தியாவின் கிழக்கு கப்பற்படை கப்பல்கள் கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு நல்லுறவுப்பயணம்
September 10 , 2017 2679 days 867 0
இந்திய அரசாங்கத்தின் ‘கிழக்கத்திய நாட்டினுடன் செயல்படுதல்’ திட்டத்தின் கீழ் இந்திய கடற்படைக்குச் சொந்தமான இரண்டு போர்க் கப்பல்கள் கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு நல்லுறவுப்பயணம் மேற்கொண்டுள்ளன. கிழக்கு கப்பற்படையைச் சேர்ந்த ஐஎன்எஸ் சாத்புரா மற்றம் ஐஎன்எஸ் கட்மாத் கப்பல்கள் விசாகப்பட்டினத்திலிருந்து செப்டம்பர் 8 அன்று புறப்பட்டு பனிரெண்டு நாடுகளின் துறைமுகங்களை சென்று அடைய உள்ளது. அவை, சிங்கப்பூர், இந்தோனேசியா, மலேசியா, தாய்லாந்து, வியட்நாம், கம்போடியா, பிலிப்பைன்ஸ், தென்கொரியா, ஜப்பான், புருனே மற்றும் ரஷ்யா ஆகும்.
பல்வேறு நிகழ்வுகளுடன் இக்கப்பல்கள் பங்கேற்கின்றன. தென்கிழக்கு ஆசிய நாடுகளின் சங்கம் (ASEAN) நடத்தும் சர்வதேச கடற்படை ஆய்வு நிகழ்விலும், சிங்கப்பூர், வியட்நாம், கம்போடியா, மற்றும் புருனேவில் நடைபெறவுள்ள தென்கிழக்கு ஆசிய நாடுகளின் சங்கத்தின் (ASEAN) இந்தியாவுடனான நட்புறவின் 25வது ஆண்டு நிகழ்விலும் பங்கேற்கிறது.
மலேசியாவில் நடைபெறும் மனிதாபிமான உதவி மற்றும் பேரழிவு நிவாரண பயிற்சியிலும் பங்கேற்கிறது.
மேலும், ரஷ்யாவில் நடைபெறவுள்ள இந்திய ரஷ்ய கடற்படை கூட்டுப்பயிற்சியான இந்திராவிலும் (INDRA) பங்கேற்கவுள்ளது. முதன்முறையாக INDRA பயிற்சியில் இந்தியா மற்றும் ரஷ்யாவின் முப்படைகளும் பங்கேற்கவுள்ளன. இது இந்திய - ரஷ்ய உறவின் முக்கிய நிகழ்வாக கருதப்படுகிறது.