2023 ஆம் ஆண்டு மார்ச் மாத இறுதியில் 20.6 சதவீதமாக இருந்த மொத்த வெளிநாட்டுக் கடனில் ஓராண்டு வரை அசல் நிறைவு காலம் கொண்ட குறுகிய காலக்’ கடனின் பங்கு 2024 ஆம் ஆண்டு மார்ச் மாத இறுதியில் 18.5 சதவீதமாகக் குறைந்துள்ளது.
2023 ஆம் ஆண்டு மார்ச் மாத இறுதியில் 22.2 சதவீதமாக இருந்த அந்நியச் செலாவணி இருப்பு மற்றும் குறுகிய காலக் கடனின் விகிதம் ஆனது 2024 ஆம் ஆண்டு மார்ச் இறுதியில் 19.0 சதவீதமாக குறைந்தது.
இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் ஆனது 2024 ஆம் ஆண்டு மார்ச் மாத இறுதியில் 663.8 பில்லியன் டாலராக இருந்தது.
இது 2023 ஆம் ஆண்டு மார்ச் இறுதியில் இருந்த அளவை விட 39.7 பில்லியன் டாலர் அதிகமாகும்.
மதிப்பீட்டு விளைவைத் தவிர்த்து, வெளிநாட்டுக் கடன் ஆனது 2023ஆம் ஆண்டு மார்ச் மாத இறுதியை விட 2024 ஆம் ஆண்டு மார்ச் மாத இறுதியில் சுமார் 39.7 பில்லியன் டாலருக்குப் பதிலாக 48.4 பில்லியன் டாலர் ஆக அதிகரித்திருக்கும்.
2023 ஆம் ஆண்டு மார்ச் மாத இறுதியில் 19.0 சதவீதமாக இருந்த வெளிநாட்டுக் கடன் மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் ஆனது 2024 ஆம் ஆண்டு மார்ச் மாத இறுதியில் 18.7 சதவீதமாகக் குறைந்துள்ளது.
2024 ஆம் ஆண்டு மார்ச் மாத இறுதியில் நீண்ட கால கடன் (ஒரு வருடத்திற்கு மேல் கால நிறைவு கொண்ட அசல்) 541.2 பில்லியன் டாலர் ஆகும்.
இது 2023 ஆம் ஆண்டு மார்ச் மாத இறுதியில் இருந்த அளவை விட 45.6 பில்லியன் டாலர் அதிகமாகும்.
வெளி நாட்டுக் கடனின் மிகப்பெரிய உட்கூறுகள்:
கடன்களின் பங்கு 33.4 சதவீதம்
நாணயம் மற்றும் வைப்புத் தொகை (23.3 சதவீதம்)
வர்த்தகக் கடன் மற்றும் முன்பணம் (17.9 சதவீதம்), மற்றும்