TNPSC Thervupettagam

இந்தியாவின் சந்தை மூலதனம்

May 27 , 2024 52 days 126 0
  • வங்கிகள் மற்றும் வாகனத் தொழில்துறையின் பங்குகளினால் சந்தைக் குறியீடுகள் அதிகளவிலான சாதனை அளவினை எட்டியதையடுத்து மும்பைப் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட பங்குகளின் மொத்தச் சந்தை மூலதனம் 5 டிரில்லியன் டாலருக்கு மேலான மதிப்புடன் முடிவடைந்தது.
  • இந்தியாவின் சந்தை மூலதனம் ஆனது, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.42 மடங்கு அல்லது 142% ஆக உயர்ந்தது என்பதோடு அது 2007 ஆம் ஆண்டில் காணப்பட்ட உச்சத்தை நெருங்கியது.
  • மும்பைப் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட அனைத்து நிறுவனங்களின் சந்தை மூலதனம் 5.05 டிரில்லியன் டாலராக உள்ளது (அல்லது 420.22 லட்சம் கோடி ரூபாய்).
  • சந்தை மூலதனம் 5-ட்ரில்லியன் டாலர் மதிப்பைக் கடந்துள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, சீனா, ஜப்பான் மற்றும் ஹாங்காங் ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக இந்தியா ஐந்தாவது நாடாக உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்