TNPSC Thervupettagam

இந்தியாவின் சாலை வலையமைப்பு

July 2 , 2023 387 days 229 0
  • அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக இந்தியா இப்போது உலகின் இரண்டாவது மிகப் பெரிய சாலை வலையமைப்பைக் கொண்டுள்ளது.
  • 2013-14 ஆம் ஆண்டில் இந்திய தேசிய நெடுஞ்சாலைகளின் மொத்த நீளம் 91,287 கி.மீ என்ற அளவிலிருந்து 2022-23 ஆம் ஆண்டில்  1,45,240 கி.மீ ஆக உயர்ந்துள்ளது.
  • இந்தியாவில் உள்ள மொத்தம் விரைவுச் சாலைகளின்  நீளமானது 4,219 கிமீ  ஆகும்.
  • கடந்த ஒன்பது ஆண்டுகளில் இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலைகளின் மொத்த நீளம் சுமார் 59% அதிகரித்துள்ளது.
  • சுங்கச்சாவடி மூலம் பெறப்படும் வருவாய் 2013-14 ஆம் ஆண்டில் ரூ.4,770 கோடியில் இருந்து 2022-23 ஆம் ஆண்டில்  ரூ.41,342 கோடியாக உயர்ந்துள்ளது (2030 ஆண்டுக்குள் சுங்கச் சாவடி வருவாயை ரூ.1,30,000 கோடியாக அதிகரிப்பதை இது ஒரு நோக்கமாகக் கொண்டுள்ளது)
  • சுங்கச் சாவடிகளில் காத்திருப்பு நேரமானது 2014 ஆம் ஆண்டில் 734 வினாடிகளில் இருந்து 2023 ஆம் ஆண்டில் 47 வினாடிகளாகக் குறைக்கப் பட்டு உள்ளதோடு, மேலும் அது 30 வினாடிகளாகக் குறைக்கப் படுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்