நுகர்வோர் விலைக் குறியீட்டின் மூலம் கணக்கிடப்படும் இந்தியாவின் சில்லறை விற்பனை விலை பணவீக்கமானது ஜனவரி மாதத்தில், இந்திய ரிசர்வ் வங்கியின் ஏற்பு வரம்பான 6 சதவீதத்தையும் தாண்டி 6.01% ஆக உயர்ந்துள்ளது.
ஒரு வருடத்திற்கு முன்பு ஒப்பீட்டளவில் குறைவான வீதத்தில் நுகர்வோர் பொருட்கள் மற்றும் தொலைத்தொடர்பு சேவைகளின் விலை அதிகரித்ததுடன் பணவீக்கத்தில் இந்த உயர்வானது ஏற்பட்டுள்ளது.
நுகர்வோர் விலைக் குறியீட்டின் மூலம் கணக்கிடப்படும் பணவீக்கமானது முந்தைய டிசம்பர் மாதத்தில் 5.66% ஆக இருந்தது.
6% உச்சகட்ட ஏற்பு வரம்பு மற்றும் தாழ்மட்ட ஏற்பு வரம்பு 2% என்ற வரம்புடன் 2026 ஆம் ஆண்டு மார்ச் 31 வரையில் வருடாந்திர பணவீக்கத்தினை 4% என்ற அளவில் வைத்திருக்க மத்திய வங்கியின் பணவியல் கொள்கையில் குறிப்பிடப்பட்டது.