TNPSC Thervupettagam

இந்தியாவின் சொந்த கார்பன் சந்தை

September 22 , 2024 64 days 83 0
  • 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் அறிவிக்கப்பட்ட கார்பன் மதிப்பு வர்த்தகத் திட்டம் (CCTS) அமலுக்கு வந்ததும் இந்த சந்தையானது உருவாக்கப்பட உள்ளது.
  • எரிசக்தி திறன் ஆணையத்தின் (BEE) படி, CCTS ஆனது 2026 ஆம் ஆண்டிற்குள் நடைமுறைக்கு வரும்.
  • CCTS என்பது உமிழ்வைக் குறைக்க அல்லது அதனைக் கட்டுப்படுத்துவதற்கானச் சந்தை அடிப்படையிலான நெறிமுறையாகும்.
  • 2016 ஆம் ஆண்டு பாரீஸ் உடன்படிக்கையின் கீழ் 2030 ஆம் ஆண்டிற்கான அதன் தேசிய அளவில் நிர்ணயிக்கப்பட்ட பங்களிப்புகள் - உமிழ்வு குறைப்பு இலக்கைப் பூர்த்தி செய்வதற்கான இந்தியாவின் பெரும் உறுதிப்பாட்டின் காரணமாக இது தோற்றுவிக்கப் பட்டது.
  • இந்தியாவின் இலக்குகளுள் ஒன்று, "அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் உமிழ்வு செறிவினை 2030 ஆம் ஆண்டிற்குள் 2005 ஆம் ஆண்டில் இருந்த அளவில் 45 சதவிகிதம் வரை" குறைப்பதாகும்.
  • 2021 ஆம் ஆண்டில், இந்திய நாடும் 2070 ஆம் ஆண்டிற்குள் நிகர-சுழிய அளவிலான உமிழ்வு பதிவான நாடாக மாற வேண்டும் என்ற இலக்கினை அறிவித்தது.
  • கார்பன் எல்லை சீரமைப்புச் செயல்முறை (CBAM) ஆனது 2026 ஆம் ஆண்டு முதல் ஐரோப்பிய ஒன்றியத்தினால் விதிக்கப்பட உள்ள கட்டணமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்