TNPSC Thervupettagam

இந்தியாவின் சொந்த சுற்றுச்சூழல் பெயரிடல் - BEAMS

September 22 , 2020 1399 days 730 0
  • மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சகமானது (MoEFCC - Ministry of Environment, Forest and Climate Change) இந்தியாவின் சொந்த சுற்றுச்சூழல் பெயரிடல் – BEAMS என்ற ஒன்றைத் தொடங்கியுள்ளது.
  • இது நீலக்கொடி கடற்கரைகள் எனச் சமீபத்தில் அங்கீகரிக்கப்பட்ட 8 கடற்கரைகளில் தொடர்ச்சியாக “#IAMSAVINGMYBEACH” என்ற மின்னணு கொடி ஏற்றப் பட்டதின் வாயிலாக தொடங்கப் பட்டுள்ளது.
  • MoEFCC ஆனது “BEAMS” (கடற்கரை சுற்றுச்சூழல் மற்றும் அழகியல் மேலாண்மை சேவைகள்) என்ற உயரிய தலைமைத் திட்டத்தைச் செயல்படுத்துவதன் மூலம் கடற்கரைப் பகுதிகளில் நீடித்த வளர்ச்சிக்கான தனது கொள்கைகளை ஊக்கப் படுத்துகின்றது.
  • BEAMS ஆனது அதன் ஒருங்கிணைந்த கடற்கரை மண்டல மோண்மைத் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப் படுகின்றது.
  • உலக அளவில் அங்கீகாரத்தைப் பெற முயலும் மற்றும் விரும்பத்தக்க சுற்றுசூழல் பெயரிடல்நீலக்கொடிசான்றிதழைப் பெற முயலும் கடற்கரைப் பகுதிகளின் நீடித்த மேம்பாட்டிற்காக இந்தியா செயல்படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்