இந்தியாவின் புகழ்பெற்ற ஆராய்ச்சியாளர் மற்றும் இந்தியாவின் டி.என்.ஏ கைரேகை தொழில்நுட்பத் தந்தையுமான (DNA Finger Printing) லால்ஜி சிங் மாரடைப்பு காரணமாக இயற்கை எய்தினார்.
ஆராய்ச்சி கள அளவிலும், தடயவியல் பயன்பாட்டின் அளவிலும், DNA கைரேகை தொழில்நுட்பத்தை இந்தியாவில் மேம்படுத்துவதில் முக்கிய கருவியாக இருந்த தலைவர்களில் லால்ஜி சிங்-கும் ஒருவராவார்.
அனைத்து உயிர் இனங்கள் மற்றும் பல்வேறு நோய்களின் DNA கைரேகை (DNA Finger Printing) மற்றும் DNA கண்டறிதலுக்கான (diagnostics) முதன்மை மையமாக DNA கைரேகை மற்றும் கண்டறியும் மையத்தை (CDFC – Centre for DNA Finger Printing and diagnostics) உருவாக்குவதற்கான பணி 1990-களில் இவரிடம் ஒப்படைக்கப்பட்டது.
ஹைதராபாத்தில் உள்ள செல்லுலார் மற்றும் மூலக்கூறு உயிரியல் மையத்தின் நிறுவனரான இவர் அதன் இயக்குநராகவும் 1998 முதல் 2009 வரை பணியாற்றியுள்ளார்.
இவர் 2001-முதல் 2014 வரை இந்து பனாரஸ் பல்கலைக்கழகத்தின் 25-வது துணைவேந்தராகவும் பணிபுரிந்துள்ளார்.
இவர் நலிவடைந்த பிரிவு மக்களை குறிப்பாக ஊரக மக்களை பாதிக்கும் மரபியற் குறைபாட்டு நோய்களை கண்டறியவும், சிகிச்சையளிக்கவும் நோக்கம் கொண்டு செயல்பட்ட ஜினோம் பவுண்டேஷன் எனும் அரசு சாரா தொண்டு நிறுவனத்தின் ஓர் அங்கமாகவும் பணிபுரிந்துள்ளார்.
மேலும் இவர் கவுரவமிக்க பத்மஸ்ரீ விருதையும் பெற்றுள்ளார்.